கிருபாசமுத்திர பெருமாள் கோயிலில் தோமாலை சேவை

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, நன்னிலம் வட்டத்துக்கு உள்பட்ட கொல்லுமாங்குடி அருகில் உள்ள சிறுபுலியூர் 

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, நன்னிலம் வட்டத்துக்கு உள்பட்ட கொல்லுமாங்குடி அருகில் உள்ள சிறுபுலியூர் தயாநாயகி சமேத கிருபாசமுத்திர பெருமாள் கோயிலில், சிறப்பு வழிபாடு மற்றும் தோமாலை சேவை சனிக்கிழமை நடைபெற்றது.
108 வைணவ தலங்களில் பாலவியாக்கிரபுரம் என்ற சிறுபுலியூர் பதினோறாவது பதியாகவும், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும் ஆகும். திருவரங்கம் போன்று தெற்கு நோக்கிய சன்னிதி கொண்டு விளங்கும் சிறப்பை பெற்றது சிறுபுலியூர் திருத்தலம்.
 புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, இக்கோயிலில்  சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலையில் மகா அபிஷேக ஆராதனை நடைபெற்று அதன்பின் தோமாலை சேவை நடைபெற்றது. தயாநாயகி சமேத கிருபாசமுத்திர பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, தயாநாயகியுடன் சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வீ.ரமணி,  செயல் அலுவலர் பி.அசோக்குமார் மற்றும் ஸ்ரீகாந்த் பட்டாச்சாரியார் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com