மழை நேரங்களில் மின்கம்பங்களின் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்: மின்வாரியம் அறிவுறுத்தல் 

மழை நேரங்களில் மின்கம்பங்களின் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

மழை நேரங்களில் மின்கம்பங்களின் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் திருவாரூர் மேற்பார்வை பொறியாளர் சீ. கிருஷ்ணவேணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில், வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். 
  மழைக் காலங்களில் மின் மாற்றிகள், மின்கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், புதைவடங்கள், இழுவைக் கம்பிகள் ஆகியவற்றின் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின்சாரக் கம்பி, பழுதடைந்த மின்சாரக் கம்பங்கள், புதைவட மின்கம்பிகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். 
  ஈரக் கையால் மின் சாதனங்களை இயக்கக் கூடாது. டிஷ் ஆண்டெனாவை வீட்டின் அருகில் செல்லும் மேல்நிலை கம்பிகளுக்கு பக்கத்தில் இருக்குமாறு கட்டக்கூடாது. கேபிள் டிவி வயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது. ஒவ்வொரு வீட்டுக்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) வைத்துக் கொள்வதுடன், அதை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும்.
  மின்கம்பத்துக்காக அமைக்கப்பட்டுள்ள கம்பியில், கொடி கட்டி துணி காயவைப்பது, கால்நடைகளை மின் கம்பத்தில் கட்டுவது உள்ளிட்ட செயல்களைத் தவிர்க்க வேண்டும். மழைக்காலங்களில் இடி அல்லது மின்னலின்போது தஞ்சம் அடைய, அருகில் மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதியாக தேர்ந்தெடுக்கவும். மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டடங்களை போதுமான இடைவெளியில் கட்ட வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மின்சார வாரியம் மற்றும் மின்சார ஆய்வுத்துறை அலுவலர்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com