"இலக்கியம் மனிதர்களை நல்வழிப்படுத்தும்'

இலக்கியப் படைப்புகள் மனிதர்களை நல்வழிப்படுத்தும். படைப்பாளிகள் நாளைய உலகுக்காக சிந் திக்கிறார்கள் என

இலக்கியப் படைப்புகள் மனிதர்களை நல்வழிப்படுத்தும். படைப்பாளிகள் நாளைய உலகுக்காக சிந் திக்கிறார்கள் என தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மொழிப்புலத் தலைவரும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலருமான பேராசிரியர் இரா.காமராசு பேசினார். 
மன்னார்குடியில் ஞாயிற்றுக்கிழமை கவிஞர் வ. சிவகுமார் எழுதிய, எளிமை கண்டு இரங்குவாய் எனும் கவிதை நூலை வெளியிட்டு அவர் மேலும் பேசியது: இளம் படைப்பாளிகள் உருவாக எல்லோரும் ஊக்கம் தர வேண்டும். நூல்களை வாசிக்கும் வழக்கம் அதிகரிக்க வேண்டும். வாழ்க்கையிலிருந்துதான் படைப்புகள் உருவாகின்றன. இக்கவிதைகள் மனித உறவுகளையும், உணர்வுகளையும் பேசுகின்றன. நம் பகுதியின் இன்றையச் சிக்கல்களைப் பதிவு செய்கின்றன. காவிரி, இயற்கை மாசு, மணல் கொள்ளை, மனித அநாகரிகம், ஜாதி, சமய பேதங்கள் என்று நிகழ்கால அவலங்கள் கவிதைகளாகி உள்ளன. இலக்கியப் படைப்புகள் மனிதர்களை நல்வழிப்படுத்தும். படைப்பாளிகள் நாளைய உலகுக்காக சிந்திக்கிறார்கள். புதிய சமுதாயத்தைப் படைக்கிறார்கள் என்றார் அவர். 
முதல் நூலை பேராவூரணி அரசுக் கல்லூரி முதல்வர் தஞ்சை ந. தனராசன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சிக்கு, கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் செ. அண்ணாதுரை தலைமை வகித்தார். அமைப்பின் மாவட்டச் செயலர் மா. சந்திரசேகரன், நாகை சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் எம். தனராஜ், தஞ்சை மருதுபாண்டியர் கல்விக் குழுமம் மேலாளர் ரா. கண்ணன், கலை இலக்கிய பெருமன்றத்தின் நகரத் தலைவர் செ. செல்வகுமார், செயலர் அ. முரளி, மன்னையின் மைந்தர்கள் குழு நிர்வாகி சே. ராம்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com