நவராத்திரி: திருமீயெச்சூர் லலிதாம்பிகை கோயிலில் தினமும் ஏகதின லட்சார்ச்சனை: வேளாக்குறிச்சி ஆதீனம் தகவல்

நவராத்திரியையொட்டி, திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலில் செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கி தினமு

நவராத்திரியையொட்டி, திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலில் செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கி தினமும் ஏக தின லட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் பரம்பரை தர்மகர்த்தாவும், வேளாக்குறிச்சி ஆதீன கர்த்தாவுமான ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்தார். 
நன்னிலம் வட்டம், பேரளம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலில் சனிக்கிழமை, ஏகதின லட்சார்ச்சனை மற்றும் நெய்க்குளத் தரிசனம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஆரூர், புகழூர், மீயச்சூர் என பாடல் பெற்ற தலங்களுள், இரண்டு பாடல் பெற்ற தலங்களை ஒருங்கே அமையப் பெற்ற  சிறப்புவாய்ந்த தலம் திருமீயச்சூர். லலிதாசஹஸ்ரநாமம் தோன்றிய பெருமை உடையது திருமீயச்சூர் தலம். இங்கே எமனுக்கும், சனீஸ்வர பகவானுக்கும் அருள்புரிந்து, சூரிய பகவானின் கருமை நிற ஒளி நீங்கி அவர் வழிபட்டதால் மேகநாதர் என இவ்வாலய சிவபெருமானாகிய சுயம்புலிங்க மூர்த்தி போற்றப்படுகிறார். 
இத்தலத்தில் நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடு, பக்தர்கள் பொருட்டு பிரார்த்தனை வழிபாடு என்ற நிலையிலே, இன்றைக்கு "நித்திய நைமித்திய காமிக வழிபாடு' என்ற அந்த லட்சார்ச்சனையானது லலிதாசகஸ்ரநாமத்தை 10 ஆவர்த்திகளாக காலை 8 மணி முதல் தொடங்கி இரவு வரை அதை நூறு முறை 1,008 ஆவர்த்திகளாக மொத்தம் ஒரு லட்சம் பூர்த்தி செய்து "மகா ஹவிர் நிவேதனம்' என்று சொல்லப்படுகின்ற சர்க்கரை பொங்கல் பாவாடை "நெய்குளத்தரிசன' நிகழ்ச்சியில் அன்னை அற்புதமாக காட்சி அளித்த பெருவிழா தற்போது நிகழ்ந்தேறி இருக்கிறது. 
மேலும் இந்தத் திருவிழா நவராத்திரி நாளில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும். நாள்தோறும் காலை, மாலை இருவேளைகளிலும் ஏகதின லட்சார்ச்சனை, உலக நலன் பொருட்டும், பக்தர்களின் பிரார்த்தனையின் பொருட்டும் செய்யப்பட இருக்கிறது. 
விஜயதசமி திருநாளான அக்டோபர் 8-ஆம் தேதி இரவு 8 மணி அளவில் 'நெய்க்குளத்தரிசனமும்', "மகா ஹவிர் நிவேதனமும்' நிகழ இருக்கிறது. ஆகவே அன்பர்கள் அனைவரும் தவறாது வந்து தரிசித்து அன்னையின் அருளுக்கு பாத்திரமாகுமாறு கேட்டுக்கொள்கிறேன். 
இந்த திருத்தலமானது பல்வேறு வகையிலும் சிறப்புடையதாக இருந்தாலும் "அன்னை அருளது சக்தியாகும் அரண் தனக்கு" என்ற சிவஞான சித்தியார் வாக்கிற்கிணங்க இத்தல பெருமானாகிய மேகநாதர் அன்னை லலிதாம்பாள் வடிவாக மக்களுக்கு அருளை வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். அருள் பெறுவீர், அனைவரும் வாரீர் என அழைக்கின்றோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com