Enable Javscript for better performance
காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 25th September 2019 06:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக்கூடாது, எல்ஐசி பாலிசிகள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும், பாலிசி புதுப்பிக்கும் காலத்தை 5 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும், எல்ஐசி முகவர்களுக்கு டோல்கேட்டில் விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் எல்ஐசி அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால், அனைத்து கோட்ட அலுவலகங்கள் முன்பாக கண்டன போராட்டம் நடத்துவது எனவும் ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
    சங்க கிளைத் தலைவர் வீ. தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலர் நி. ராஜா, கிழக்கு கோட்டச் செயலர் ரா. கருணாநிதி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் நா. லெனின், எல்ஐசி ஊழியர்கள் சங்க கோட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், கிளைத் தலைவர் நித்திஷ் சண்முகசுந்தரம், கிளைச் செயலர் கமல்வடிவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai