Enable Javscript for better performance
காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாகை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
    விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் வி. எஸ். கலியபெருமாள், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவல் துறையினரைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. விவசாய தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai