Enable Javscript for better performance
புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தர்னா- Dinamani

சுடச்சுட

    

    புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தர்னா

    By DIN  |   Published on : 25th September 2019 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி திருவாரூரில் ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் தர்னா செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது. 
    புதிய தொழிலாளர் சட்டங்களால், எவ்வித சலுகையும் பெறுவதற்கு வாய்ப்பு கிடையாது, கட்டுமானத் தொழிலாளர்களின் நலன்களை சீர்குலைக்கும் வகையில் அமைந்திருப்பதால், புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், நடைமுறையில் உள்ள சட்டங்களையே அமல்படுத்த வேண்டும், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உரிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே இந்த தர்னா போராட்டம் நடைபெற்றது. 
    சங்க மாவட்டத் தலைவர் தீன. கெளதமன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டச் செயலர் வி. கலைச்செல்வன், பொருளாளர் ஏ. கண்ணன், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலர் எஸ். செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கோவி. அறிவு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai