ஆறு, குளங்களில் குழந்தைகளை தனியாக குளிக்க அனுப்ப வேண்டாம்: ஆட்சியர் அறிவுறுத்தல்

ஆறுகளில் தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருப்பதால் குழந்தைகளை குளிக்க அனுமதிக்க வேண்டாம் என

ஆறுகளில் தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருப்பதால் குழந்தைகளை குளிக்க அனுமதிக்க வேண்டாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த், அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில், தற்போது வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தவிர, மேட்டூர் அணையிலிருந்து சுமார் 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி மற்றும் கிளை ஆறுகள், பாசனக் கால்வாய்களில் அதிகளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. தொடர் மழையின் காரணமாகவும், பாசனக் கால்வாய்களில் தண்ணீர் வரத்து அதிகமாகவுள்ளதால் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் அதிகம் இருந்து வருகிறது.
எனவே, பொதுமக்கள் ஆறு மற்றும் குளங்களில் பாதுகாப்பாக குளிக்க வேண்டும். அத்துடன் குழந்தைகளை தனியாக குளிக்க அனுமதிக்க வேண்டாம். மேலும், கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் உடைமைகள் மற்றும் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com