கர்ப்பிணிகள் சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும்: ஆட்சியர்

குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க கர்ப்பிணிகள் சத்தான உணவுகள் சாப்பிடுவது அவசியம் என மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் கூறினார். 

குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க கர்ப்பிணிகள் சத்தான உணவுகள் சாப்பிடுவது அவசியம் என மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் கூறினார். 
திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வுப் பேரணியை தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியது: திருவாரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் (போஷான் அபியான் திட்டத்தின் கீழ் செப்டம்பர் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுகிறது. இரும்பு சத்துள்ள உணவுகள், சத்தான உணவைத் தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவது, நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பதால் கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.
நல்ல ஊட்டச்சத்து உணவைக் கொடுப்பதால் குழந்தைகளிடம் உடல் வளர்ச்சி குறைபாடு, குள்ளமாதல் பிரச்னை மற்றும் எடை குறைவு பிரச்னை வராமல் தடுக்கலாம். மேலும், உணவு உண்பதற்கு முன்பும், கழிப்பறை பயன்படுத்திய பின்னரும் நன்றாக கைக்கழுவுதல், அனைவரும் கழிப்பறைப் பயன்படுத்துவதை உறுதி செய்தல், பாதுகாப்பான குடிநீர் எடுத்துக் கொள்ளுதல் ஆகியவை குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.
புதிய ரயில் நிலையத்தில் தொடங்கிய பேரணி பழைய பேருந்து நிலையம், தெற்குவீதி வழியாக திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில்,  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் திட்ட அலுவலர் ராஜம், வட்டாட்சியர் நக்கீரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகளின் வட்டார அலுவலர் புவனேஷ்வரி, அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com