காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக்கூடாது, எல்ஐசி பாலிசிகள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும், பாலிசி புதுப்பிக்கும் காலத்தை 5 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும், எல்ஐசி முகவர்களுக்கு டோல்கேட்டில் விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் எல்ஐசி அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால், அனைத்து கோட்ட அலுவலகங்கள் முன்பாக கண்டன போராட்டம் நடத்துவது எனவும் ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சங்க கிளைத் தலைவர் வீ. தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலர் நி. ராஜா, கிழக்கு கோட்டச் செயலர் ரா. கருணாநிதி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் நா. லெனின், எல்ஐசி ஊழியர்கள் சங்க கோட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், கிளைத் தலைவர் நித்திஷ் சண்முகசுந்தரம், கிளைச் செயலர் கமல்வடிவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com