அக்.3-இல் சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சிக்கான நேர்காணல்

சிறுபான்மையினர்களுக்கு இலவச திறன் வளர்ப்புப் பயிற்சிக்கான நேர்காணல் அக்டோபர் 3- ஆம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.


சிறுபான்மையினர்களுக்கு இலவச திறன் வளர்ப்புப் பயிற்சிக்கான நேர்காணல் அக்டோபர் 3- ஆம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் நிதி உதவியுடன், டாம்கோ மூலம் படித்து வேலையில்லாத சிறுபான்மையின வகுப்பைச் சார்ந்த இளைஞர்களுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் மூலம் இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வழங்குவதற்கும், பயிற்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் நிதி உதவியுடன், டாம்கோ மூலம்  ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இத்திட்டத்தின்கீழ் எம்பிராய்டரி பயிற்சி 50 பயனாளிகளுக்கு 3 மாதம் நடத்தப்பட உள்ளன.
 இத்திட்டத்தின்கீழ் மதவழி சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியாளரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமலும், 18 முதல் 55 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். இப்பயிற்சியின் போது ஒரு பயனாளிக்கு ரூ.1000 பயிற்சி உதவித்தொகையாக அளிக்கப்படும். உண்டு, உறைவிடக் கட்டணம் ஏதும் வழங்கப்படாது.  
இதற்கான நேர்காணல், எண்.1டி, முதல் குறுக்கு தெரு, சி.வி.நாயுடு தெரு, ஜெயா நகர், திருவள்ளூர் மாவட்டம்-602001 என்ற முகவரியில் உள்ள ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் அக்டோர் 3- ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும். இதில் பயிற்சி பெற விரும்புவோர் அசல் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.  
மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், திருவாரூர் அல்லது 9380513874, 044-28514846) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com