அங்கன்வாடி பணியாளர்களுக்கு காய்கறி விதை

கோட்டூர் ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் முதலமைச்சரின் கிராமப்புற வீட்டு காய்கறி உற்பத்தி திட்டம்


கோட்டூர் ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் முதலமைச்சரின் கிராமப்புற வீட்டு காய்கறி உற்பத்தி திட்டம் ஆகியவை இணைந்து நடத்திய காய்கறி விதைகள் வழங்கும் நிகழ்ச்சி, கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோட்டூர் ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ப. அபிநயா தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் ப. பிரபு, திட்ட உதவியாளர் ம. கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  உதவி தோட்டக்கலை அலுவலர் இரா. கவியரசன் கிராமப்புற வீட்டுக் காய்கறி உற்பத்தியின் அவசியம் குறித்து விளக்கினார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) நா. சுப்ரமணியன் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காய்கறி விதைகளை வழங்கினார். 
 நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர். இயற்கை உரங்களைப் பயன்படுத்தி, இயற்கை முறையில் காய்கறி செடிகளை வளர்த்து, அதில் கிடைக்கும் காய்கறிகளை உண்பதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. தினமும் காய்கறிகளை உண்பதால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது என்ற கருத்துகள் வலியுறுத்தப்பட்டன. அவரை, பாகல், முருங்கை, வெண்டை, கத்தரி, புடலை, தட்டைப்பயிறு, சின்ன வெங்காயம் ஆகிய விதைகள் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன. அங்கன்வாடி அமைப்பாளர் கனகா வரவேற்றார். தோட்டக்கலை பயிர் அறுவடை பரிசோதனையாளர் மு.கேசவன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com