சுகாதார விழிப்புணர்வுப் பிரசாரப் பயணம்

வேதாரண்யத்தில் திறந்தவெளியில் மலம் கழித்தலுக்கு எதிரான சுகாதார விழிப்புணர்வுப் பிரசாரப் பயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


வேதாரண்யத்தில் திறந்தவெளியில் மலம் கழித்தலுக்கு எதிரான சுகாதார விழிப்புணர்வுப் பிரசாரப் பயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட தேசிய பசுமைப் படை மற்றும் வேதாரண்யம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பு, வேதாரண்யம் ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் ஆகியவை சார்பில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. 
திறந்தவெளியில் மலம் கழித்தலுக்கு எதிரான தெருமுனைப் பிரசாரத்துக்கு சிகசு அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் அன்பழகன் தலைமை வகித்தார். அரிமா சங்கத் தலைவர் செல்வராஜ், ரோட்டரி சங்கத் தலைவர் கருணாநிதி, நகராட்சி நிராவாகம் சார்பாக சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேசிய  நிர்வாக பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் திறந்தவெளி கழிப்பிடங்கள், அதனால் ஏற்படும் அபாயம் குறித்து பேசினார்.
ஆசிரியை தேவி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொது மக்களிடம் விநியோகித்து பயணத்தைத் தொடங்கி வைத்தார். பசுமைப் படை பள்ளி ஒருங்கிணைப்பாளர் எழிலரசன், 
உதவி அலுவலர் புகழேந்தி  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com