முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில்ஏழைகளுக்கு உலகத் தரத்திலான மருத்துவச் சேவை: அமைச்சர் ஆர். காமராஜ் பெருமிதம்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் ஏழை மக்களுக்கும் உலகத் தரத்தில் மருத்துவச் சேவை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் பெருமிதம் தெரிவித்தார்.


மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் ஏழை மக்களுக்கும் உலகத் தரத்தில் மருத்துவச் சேவை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் பெருமிதம் தெரிவித்தார்.
நன்னிலம் வட்டம், சன்னாநல்லூரில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் விழிப்புணர்வு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமை, அமைச்சர் ஆர். காமராஜ் தொடங்கிவைத்துப் பேசியது: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஏழை- எளிய மக்கள் நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக எவ்விதக் கட்டணமும் செலுத்தாமல் பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டத்தை தற்போது செயல்பட்டு வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட உள்ளது. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து மக்களுக்கும் உலகத் தரத்தில் மருத்துவச் சேவையை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் இதுவரை சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன் பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும், 38 அரிய வகை நோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது. 
இத்திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு ஒரு குடும்பம் ரூ. 5 லட்சம் வரை பயன்பெறலாம். இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள 
வேண்டும். 
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள், சாதாரண ஏழை எளிய மக்களுக்கும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் மருத்துவச் சேவை எனும் மகத்தான பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை தமிழக அரசின் சார்பாக பாராட்டுவதில் பெருமைப்படுகிறேன் என்றார் அமைச்சர்.  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், குடும்ப நலப்பணிகள் இணை இயக்குநர் உமா, முன்னாள் எம்பி டாக்டர் கே.கோபால், திருவாரூர் வருவாய்க் கோட்டாட்சியர் (பொறுப்பு )  ஜெயராஜ்,  நன்னிலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வினோத்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் 
கலந்துகொண்டனர்.
மன்னார்குடியில்....
 மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் ஜன் ஆரோக்கியா யோஜனா விழிப்புணர்வு மருத்துவ முகாமை உணவுத் துறை  அமைச்சர் ஆர். காமராஜ் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பங்கேற்று, முகாமைத் தொடங்கி வைத்தார். அத்துடன், விழிப்புணர்வு கையேட்டையும் அவர் வெளியிட்டார். 
 நிகழ்ச்சியில் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயகுமார், வருவாய்க் கோட்டாட்சியர் (மன்னார்குடி) புண்ணியகோட்டி உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com