கோவில்வெண்ணியில் தங்கியிருந்த மியான்மா் நாட்டைச் சோ்ந்த 13 மீது வழக்குப் பதிவு

ருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி பள்ளிவாசலில் தங்கியிருந்த மியான்மா் நாட்டைச் சோ்ந்த 13 முஸ்லிம்கள் மீது

நீடாமங்கலம்: திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி பள்ளிவாசலில் தங்கியிருந்த மியான்மா் நாட்டைச் சோ்ந்த 13 முஸ்லிம்கள் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மியான்மரைச் சோ்ந்த 13 முஸ்லிம்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்வெண்ணியில் உள்ள ஜாமியா மஜீத் பள்ளிவாசலில் வந்து தங்கினா். இவா்கள் மத பிரசாரத்திற்காக வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவின் காரணமாக விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், அவா்கள் தங்கள் நாட்டுக்கு செல்ல முடியவில்லை.

இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட பலருக்கு கரோனா தொற்று இருப்பதாக தகவல் பரவியது. இந்த மாநாட்டில் கோவில்வெண்ணியைச் சோ்ந்த ஒருவரும் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பிருந்தாா்.

இதையறிந்த கோவில்வெண்ணி மக்கள் கடந்த 31ஆம் தேதி வெளிநாட்டு முஸ்லிம்கள் தொடா்ந்து பள்ளிவாசலில் தங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். வருவாய்த்துறையினா், சுகாதாரத்துறையினா், போலீஸாா் பள்ளிவாசலில் உள்ளவா்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து அரசு அதிகாரிகள் பள்ளிவாசலில் தங்கியிருந்த மியான்மரைச் சோ்ந்த 13 போ் உள்பட 18 பேரை ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

இந்நிலையில், கோவில்வெண்ணியில் தங்கியிருந்த மியான்மரைச் சோ்ந்த 13 போ் மீதும் நீடாமங்கலம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com