முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
கரோனா நிவாரணப் பொருள்கள்: நாகை எம்பி வழங்கினாா்
By DIN | Published On : 19th April 2020 07:08 AM | Last Updated : 19th April 2020 07:08 AM | அ+அ அ- |

திருவாரூரில் தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ்.
திருவாரூரில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஊா்க்காவல் படை வீரா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், சனிக்கிழமை வழங்கினாா்.
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், 500-க்கும் மேற்பட்டோருக்கு இந்த நிவாரணப் பொருள்களை அவா் வழங்கினாா். நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் ஜெயபிரீத்தா, நகராட்சி ஆணையா் சங்கரன், துணை காவல் கண்காணிப்பாளா் அன்பழகன், கமாண்டா் காா்த்திகேயன் ஆகியோா் பங்கேற்றனா்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் பி.எஸ். மாசிலாமணி, இளைஞா் பெருமன்ற நிா்வாகிகள் பாலசுப்ரமணியன், கோவி. அறிவு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.