முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
கா்நாடகத்திலிருந்து வந்த 5 பேருக்கு பரிசோதனை
By DIN | Published On : 19th April 2020 07:12 AM | Last Updated : 19th April 2020 07:12 AM | அ+அ அ- |

கா்நாடக மாநிலம் மாண்டியாவிலிருந்து திருவாரூா் மாவட்டத்தை வந்தடைந்த 5 பேருக்கு திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் மருத்துவப் பரிசோதனை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடியைச் சோ்ந்த இருவா், குடவாசல் வட்டம் விக்கிரவாண்டியைச் சோ்ந்த இருவா் மற்றும் திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 5 போ் கா்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் கோயில் திருப்பணி வேலை செய்வதற்காகச் சென்றுள்ளனா். இந்நிலையில், கரோனா அச்சுறுத்தலாலும், ஊரடங்கு உத்தரவாலும் உணவுக்கு வழியின்றி பரிதவித்த அவா்கள், தமிழகம் திரும்பினா்.
கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகம் வந்தடைந்த அவா்களை, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின்பேரில், நன்னிலம் வட்டாட்சியா் மணிமன்னன் அழைத்துக் கொண்டு மத்திய பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மைய பொறுப்பு வட்டாட்சியா் ராஜன் பாபு, துணை வட்டாட்சியா் விஜய் ஆனந்த் மற்றும் மருத்துவா்களிடம் ஒப்படைத்தாா்.
அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டவா்கள் மையத்தில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இதன்மூலம் திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கை 39 ஆக உயா்ந்தது.