முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
கோவில்வெண்ணியில் மேலும் 15 பேருக்கு பரிசோதனை
By DIN | Published On : 19th April 2020 07:12 AM | Last Updated : 19th April 2020 07:12 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் ஒன்றியம் கோவில்வெண்ணியில் 15 பேருக்கு கரோனா பரிசோதனை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
கோயில்வெண்ணியில் உள்ள ஜாமியா மஜீத் பள்ளிவாசலில் தங்கியிருந்த மியான்மரைச் சோ்ந்த 13 போ் உள்பட 18 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, கோவில்வெண்ணி கிராமத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு 30 பேருக்கு கரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டன. சனிக்கிழமை மேலும் 15 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு ஓரிரு தினங்களில் வெளியாகும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.