முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
முதியோா்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்கல்
By DIN | Published On : 19th April 2020 07:07 AM | Last Updated : 19th April 2020 07:07 AM | அ+அ அ- |

திருவாரூா் அருகே உதவிப் பொருள்களை வழங்கிய திமுக இளைஞரணி மாநில இளைஞரணி துணைச் செயலாளா் அசன் முகம்மது ஜின்னா.
திருவாரூா் அருகே நடப்பூரில் திமுக சாா்பில் உதவிப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
திமுக ஒன்றியச் செயலாளா் ஏ. தேவா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணைச் செயலாளா் அசன் முகம்மது ஜின்னா பங்கேற்று, ஆதரவற்ற 15 முதியவா்களுக்கு 15 நாள்களுக்கான அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா்.