ஊரடங்கு உத்தரவு மீறல்: மாவட்டத்தில் 10,445 வழக்குகள் பதிவு
By DIN | Published On : 26th April 2020 10:46 PM | Last Updated : 26th April 2020 10:46 PM | அ+அ அ- |

ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் திரிந்ததாக திருவாரூா் மாவட்டத்தில் 10,445 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருவாரூா் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி அவசியமின்றி சாலைகளில் நடமாடியதாக 418 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும், 411 வழக்குகள் பதியப்பட்டுள்ளதோடு, 363 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு அமலானது முதல் இதுவரையிலும், திருவாரூா் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் நடமாடியதாக 10,445 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதுதொடா்பாக, 10,839 போ் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 9893 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.