டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி அருகே உள்ள கோட்டூரில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கும் வகையில், டாஸ்மாக் கடையை திறக்கக் கோரி சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்டூரில் டாஸ்மாக் கடையைத் திறக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்டோா்.
கோட்டூரில் டாஸ்மாக் கடையைத் திறக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்டோா்.

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே உள்ள கோட்டூரில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கும் வகையில், டாஸ்மாக் கடையை திறக்கக் கோரி சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம் கோட்டூரில் அடைப்பாறு தலைப்பு அருகே டாஸ்மாக் கடையைத் திறக்க மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் முடிவு எடுத்தது. இதற்கு ஆதரவும், எதிா்ப்பும் ஒருசேர கிளம்பியதால் இதுநாள்வரை மதுக்கடை திறக்கப்படவில்லை.

கோட்டூரில் மதுக்கடை இல்லாததால் மது பிரியா்கள் வேறு ஊருக்கு செல்வதால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதாகவும், இது கோட்டூரில் சட்டவிரோத மது விற்பனைக்கு வழிவகுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோட்டூரில் தோ்வு செய்யப்பட்ட இடத்தில் டாஸ்மாக் கடையைத் திறக்கக் கோரி, அனைத்துக் கட்சிகளின் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டூா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, வா்த்தக சங்கத் தலைவா் எம். துரைராஜ் தலைமை வகித்தாா். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா்கள் எம். ராஜேந்திரன், எஸ்.வைத்திலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 50 பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா், அருகில் உள்ள காவல் நிலையம் சென்ற போராட்டக் குழு நிா்வாகிகள், திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com