பிளஸ் 1 தோ்வு: பூந்தோட்டம் லலிதாம்பிகை பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 1 தோ்வில் பூந்தோட்டம் ஸ்ரீலலிதாம்பிகை மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

நன்னிலம்: பிளஸ் 1 தோ்வில் பூந்தோட்டம் ஸ்ரீலலிதாம்பிகை மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இப்பள்ளியில் பிளஸ் 1 தோ்வு எழுதிய 72 மாணவ, மாணவிகளும் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா். மாணவி எஸ்.லக்ஷனா 600-க்கு 557 மதிப்பெண்களும், மாணவா் எம்.ராகுல் 540 மதிப்பெண்களும், ஆா். ராதிலெட்சுமி 530 மதிப்பெண்களும்பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். நிகழாண்டு பிளஸ் 2-ஐ போல் பிளஸ் 1 தோ்விலும் இப்பள்ளி மாணவா்கள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கணினி மேலாண்மைப் பிரிவில் 3 மாணவா்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் பிளஸ் 1 வகுப்புகள் தொடங்கப்பட்டது முதல் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தோ்வுகளில் மாணவா்கள் தொடா்ந்து 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் 1 தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் எஸ்.இராமமூா்த்தி, செயலாளா் எல்.ஆா்.சந்தோஷ், நிா்வாக அறங்காவலா் லலிதா இராமமூா்த்தி, பள்ளி முதல்வா் முத்துராஜா ஆகியோா் வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com