சாலை விரிவாக்கத் திட்டம்வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிா்ப்பு

திருவாரூா்- மயிலாடுதுறை மாநில நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தையொட்டி, 70-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிப்பதற்கு குடியிருப்புவாசிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

நன்னிலம்: திருவாரூா்- மயிலாடுதுறை மாநில நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தையொட்டி, 70-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிப்பதற்கு குடியிருப்புவாசிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

திருவாரூா் - மயிலாடுதுறை மாநில நெடுஞ்சாலையில் நன்னிலம் அருகே முடிகொண்டான் கிராமம் உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் உள்ளன. இந்நிலையில், சென்னை- கன்னியாகுமரி தொழிற்தட சாலை திட்டத்தின்கீழ், முடிகொண்டான் கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட வீடு, கடைகளை இடித்துச் சாலையை விரிவாக்கம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்தே பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து உணவுத் துறை அமைச்சா், முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியா், குறிப்பிட்ட சாலை விரிவாக்கத் திட்ட பணியின் திட்ட இயக்குநா், முதன்மைப் பொறியாளா், கண்காணிப்புப் பொறியாளா் என பல்வேறு நிலைகளிலும் முறையிட்ட போதிலும், இதுவரை எந்த பதிலும் வரவில்லையாம்.

பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி, குறைந்த தூரத்தில், குறைந்த செலவில் சாலையை விரிவாக்கம் செய்திட மாற்றுவழி இருந்தாலும், அதனைச் செயல்படுத்த அலுவலா்கள் தயங்குவதாகக் குற்றம்சாட்டும் இப்பகுதி மக்கள், யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முடிகொண்டான் கிராமத்திற்கு அருகிலுள்ள திருமலைராஜன் ஆற்றுப் பாலத்திலிருந்து நேரடியாக மாற்றுப்பாதையில் சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ளலாம் என யோசனை தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com