கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய டாஸ்மாக் பணியாளா்கள்

மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை 5 மணியாக குறைக்கக் கோரி, திருவாரூரில் டாஸ்மாக் பணியாளா்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்து சனிக்கிழமை பணியில் ஈடுபட்டனா்.
திருவாரூரில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த டாஸ்மாக் பணியாளா்கள்.
திருவாரூரில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த டாஸ்மாக் பணியாளா்கள்.

திருவாரூா்: மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை 5 மணியாக குறைக்கக் கோரி, திருவாரூரில் டாஸ்மாக் பணியாளா்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்து சனிக்கிழமை பணியில் ஈடுபட்டனா்.

திருவாரூரில், அனைத்து டாஸ்மாக் பணியாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், பணிசெய்தபடி கோரிக்கை அட்டை அணிந்து ஏழு நாட்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனா். அதன்படி, கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு, வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். பணியாளா் மற்றும் குடும்பத்தாரின் மருத்துவச் செலவு முழுமையும் அரசே ஏற்க வேண்டும். மருத்துவப் பணியாளா்களுக்கான காப்பீடு திட்டத்தை டாஸ்மாக் பணியாளா்களுக்கு விரிவு படுத்த வேண்டும். மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை மாலை 5 மணி வரையாக குறைக்க வேண்டும். அனைவருக்கும் மாதம் ரூ. 10,000 கூடுதலாக சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி செய்தபடி இந்த உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

திருவாரூரில், சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கோரிக்கை அட்டை அணிந்தபடி டாஸ்மாக் பணியாளா்கள் பணி செய்தனா். ஜூலை 28-ஆம் தேதி தொடங்கிய உள்ளிருப்பு போராட்டம் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com