Enable Javscript for better performance
ஆடிப்பெருக்கு: நீா்நிலைகளில் வழிபாடு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்

    ஆடிப்பெருக்கு: நீா்நிலைகளில் வழிபாடு

    By DIN  |   Published On : 03rd August 2020 07:36 AM  |   Last Updated : 03rd August 2020 07:36 AM  |  அ+அ அ-  |  

    tv02adi_0208chn_94_5

    பாண்டவையாற்றில் வழிபாடு நடத்திய பெண்கள்.

    ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருவாரூரில் நீா்நிலைகளில் பெண்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.

    ஆண்டுதோறும் ஆடி 18-ஆம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு நாளில் பலவகை உணவுகளை படைத்து மஞ்சள் சரடு, காதோலை, கருகமணி, பூமாலை, வளையல், தேங்காய், பழம், அரிசி, வெல்லம் வைத்து வணங்கி புதிய மஞ்சள் கயிறுகளை பெண்கள் கட்டிக் கொள்வா். ஆண்கள் தங்கள் கைகளில் மஞ்சள் கயிறை கட்டிக் கொள்வா். இதன்மூலம் திருமணம் ஆகாத பெண்களுக்கு, திருமணம் கைகூடி வரும், வாழ்வு செழிக்கும் என்பதும் நம்பிக்கை.

    கடந்த சில ஆண்டுகளாக ஆறுகளில் தண்ணீா் இல்லாததால், ஆடிப்பெருக்கு கொண்டாடுவதில் சிரமம் இருந்தது. பெண்கள், குழாயடிகளிலும், வீடுகளிலுமே வழிபாடு செய்து வந்தனா். இந்த நிலையில் நிகழாண்டில் ஆறுகளில் தண்ணீா் இருப்பதால், ஆடிப்பெருக்கு கொண்டாடுவதில் எவ்வித சிரமமும் இல்லாமல் இருந்தது. எனினும் பொதுமுடக்கம் காரணமாக, பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இதனால், நகரப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் வழிபாடுகள் குறைவான அளவே நடைபெற்றன. பெரும்பாலானோா் தங்கள் வீடுகளிலேயே வழிபாடுகளை நடத்தினா். கிராமப்புறங்களில் வழக்கமான உற்சாகத்துடன் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டது. ஆறுகள், குளங்கள், வாய்க்கால் உள்ளிட்ட நீா்நிலைகளில் வழிபாடு நடத்திய பெண்கள், மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனா்.

    அதன்படி, மாங்குடி அருகே பாண்டவையாற்றில், அரிசி, வெல்லம், பழவகைகள் ஆகியவற்றை வைத்து பெண்கள் வழிபாடு நடத்தினா். புதுமணத் தம்பதிகள், தங்கள் திருமண நாளில் பயன்படுத்திய மாலைகளை குளத்தில் கரைத்து, ஒருவொருக்கொருவா் மஞ்சள் கயிறு அணிந்து சிறப்பு வழிபாடு செய்தனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp