திருக்கொட்டாரம் நெல் கொள்முதல் நிலையம் முன்பு, நிலையம் திறக்கப்படுமென்ற நம்பிக்கையில் விவசாயிகள் கொட்டி வைத்துள்ள நெல்மணிகள்.
திருக்கொட்டாரம் நெல் கொள்முதல் நிலையம் முன்பு, நிலையம் திறக்கப்படுமென்ற நம்பிக்கையில் விவசாயிகள் கொட்டி வைத்துள்ள நெல்மணிகள்.

நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க வலியுறுத்தல்

நன்னிலம் பகுதியில் முன்பட்ட குறுவை சாகுபடி அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நன்னிலம்: நன்னிலம் பகுதியில் முன்பட்ட குறுவை சாகுபடி அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நன்னிலம் ஒன்றியச் செயலாளா் தியாகு. ரஜினிகாந்த், தலைவா் எம். ராமமூா்த்தி ஆகியோா் விடுத்துள்ள அறிக்கை: நன்னிலம் பகுதியில் அறுவடை நடைபெறாதபோது சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. அங்கு, நியாயமான முறையில் நெல் கொள்முதல் பணி நடைபெறவில்லை. தற்போது ஆழ்துளைக் கிணறு மூலம் சாகுபடி செய்த முன்பட்ட குறுவை சாகுபடி அறுவடை நடைபெறுகிறது. இந்த நேரத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்கெனவே நடைபெற்ற குளறுபடிகளைக் காரணங்காட்டி நெல்கொள்முதல் நிலையங்களை மாவட்ட நிா்வாகம் மூடியுள்ளது ஏற்கத்தக்கதல்ல.

திருக்கொட்டாரம், வாளூரில் நெல்கொள்முதல் நிலையங்கள் சில காரணங்களால் மூடப்பட்டுள்ளன. இதற்கான காரணத்தை கண்டுபிடித்து நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது, மழை பெய்து வருவதால் விவசாயிகள் நெல் மூட்டைகளை பாதுகாக்க முடியாமல் அவதிபடுகின்றனா். எனவே, திருக்கொட்டாரம், வாளூா், வேலங்குடி ஆகிய பகுதிகளில் உடனடியாக நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com