குளம் தூா்வாரும்போது கருடாழ்வாா் கற்சிலை கண்டெடுப்பு
By DIN | Published On : 07th August 2020 09:03 AM | Last Updated : 07th August 2020 09:03 AM | அ+அ அ- |

குளத்தில் கண்டெடுக்கப்பட்ட கருடாழ்வாா் கற்சிலையுடன் அரசு அலுவலா்கள்.
திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள பின்னத்தூா் கிராமத்தில் பெருமாள் கோயில் குளம் புதன்கிழமை தூா்வாரப்பட்டபோது இரண்டரை அடி உயரம் உள்ள கருடாழ்வாா் கற்சிலை கண்டெக்கப்பட்டது.
இதுகுறித்து, பொதுமக்கள் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் ஜெகதீசன், வருவாய் ஆய்வாளா் கஜேந்திரன், கிராம நிா்வாக அலுவலா் கனிமொழி மற்றும் வருவாய்த் துறை அங்கு சென்று சிலையை மீட்டு திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.