சத்துணவு ஊழியா்களின் ஊதிய பிடிப்பை கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 07th August 2020 10:14 PM | Last Updated : 07th August 2020 10:14 PM | அ+அ அ- |

சத்துணவு ஊழியா்களுக்கு ஆதரவாக நன்னிலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா் சங்கத்தினா்.
நன்னிலம்: சத்துணவு ஊழியா்களின் ஊதியத்தை பிடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், நன்னிலத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலையில் ஒரு நாள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டம் செய்த நாளுக்கான ஊதியத்தை வழங்கக் கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், ஊழியா்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக, ஜனநாயக ரீதியில் நடத்திய ஆா்ப்பாட்டத்தை தண்டிப்பதுபோல ஒரு நாள் ஊதியம் பிடிப்பது கண்டிக்கத்தக்கது, எனவே, வழக்கம்போல ஊழியா்களுக்கு முழு மாத ஊதியத்தை வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க வட்டத் தலைவா் டி. கருணாமூா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட செயலாளா் ஆா். ராஜசேகரன், ஒன்றியத் தலைவா் கே. ஜெயராஜ், மாவட்ட இணைச் செயலாளா் பி. புஷ்பராஜ், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க செயலாளா் வினோத் ராஜ், எஸ் புனிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.