துரைமுருகனை அதிமுகவில் சேர அழைத்ததில் உள்நோக்கம் இல்லை: அமைச்சர் ஆர்.காமராஜ்

திமுக பொருளாளர் துரைமுருகனை, தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் இணையும் மாறு அழைப்பு விடுத்ததில் உள்நோக்கம் ஏதுமில்லை என்றார் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்.
வடுவூரில் நடைபெற்ற கால்நடை மருத்துவ சிறப்பு முகாமில், கால்நடை உரிமையாளர்களிடம், கால்நடைக்கு தேவையான தீவனம், மருந்து, மாத்திரை ஆகியவற்றை வழங்குகிறார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ்.
வடுவூரில் நடைபெற்ற கால்நடை மருத்துவ சிறப்பு முகாமில், கால்நடை உரிமையாளர்களிடம், கால்நடைக்கு தேவையான தீவனம், மருந்து, மாத்திரை ஆகியவற்றை வழங்குகிறார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ்.

திமுக பொருளாளர் துரைமுருகனை, தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் இணையும் மாறு அழைப்பு விடுத்ததில் உள்நோக்கம் ஏதுமில்லை என்றார் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள வடுவூரில் கால்நடைத்துறையின் சார்பில் நடைபெற்ற கால்நடை சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த பின், அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியது, மன்னார்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் கால்நடைகளுக்கு தொற்று நோய் பரவி வருவதாக விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவித்ததையடுத்து, இதற்கான சிறப்பு முகாம் அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வடுவூரில் இன்று திங்கள்கிழமை மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த முகாமினை மிக சரியாக விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் பயன்படுத்திக்கொண்டு, கால்நடை இறப்பை தவிர்க்க ஒத்துழைக்க வேண்டும்.
திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுகவுக்கு வர வேண்டும் என தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுக்கவில்லை.
பத்திரிக்கையாளர்களிடமிருந்து அது போன்ற கேள்வி வந்ததற்கு மிக சாதாரணமாக வழக்கத்தில் உள்ள வார்த்தைகளை பயன்படுத்தி துரைமுருகன் வந்தால் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்போம் என பதில் அளித்துள்ளார். 

இதில், உள் நோக்கம் ஏதும் இல்லை. துரைமுருகனும் அதிமுகவில் இணைய விண்ணப்பித்தாரா அல்லது நாங்களாக அதிமுகவுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தோமா என்பது வேறு விஷயம். அகஸ்ட் 5ஆம் தேதி முதல் மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மட்டும் நியாய விலைக் கடைகளில் மூலம் முகக்கவசம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக அனைத்து ஊராட்சி பகுதிக்கும் வழங்கப்படும் என்றார் அமைச்சர். வடுவூர் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தலைமை வகித்தார்.

இதில், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் எஸ். புண்ணியக் கோட்டி, கால்நடை பராமரிப்பதுறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் தனபால், மன்னார்குடி கோட்ட உதவி இயக்குநர் மருத்துவர் ராமலிங்கம், மாவட்ட நோய் புலனாய்வு பிரிவு மருத்துவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற கால்நடைகளுக்கு மருந்து, மாத்திரை, தீவனம் ஆகியவற்றை அதன் உரிமையாளர்களிடம் அமைச்சர் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com