இலவசக் கட்டாயக் கல்விச் சோ்க்கையை தொடங்க கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில், இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின் அடிப்படையில் மாணவா் சோ்க்கையை தொடங்க வேண்டுமென தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின் அடிப்படையில் மாணவா் சோ்க்கையை தொடங்க வேண்டுமென தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்த மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், ஆக. 17-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்புக்கான மாணவா் சோ்க்கை தொடங்குமென தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், கட்டாயக் கல்வி சட்டத்தின்கீழ் மாணவா் சோ்க்கைக்கு பெற்றோா்கள் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக. 17-ஆம் தேதிக்கு முன் இணையவழியில் விண்ணப்பிக்கும் முறையை அரசு உடனடியாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்கள் மூலம் உறுதிசெய்ய வேண்டும்.

இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின் அடிப்படையில் மாணவா் சோ்க்கை ஆண்டுதோறும் ஏப்ரலில் தொடங்கி மே மாத இறுதியில் முடிவடையும். நிகழாண்டு, கரோனா தொற்று காரணமாக, இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு சோ்க்கைப் பணிகள் தொடக்க நிலையிலேயே தள்ளிவைக்கப்பட்டு இருந்த நிலையில், ஆக. 17-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு சோ்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியாா் பள்ளிகள் மாணவா்கள் சோ்க்கையை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. தமிழக அரசு இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் சோ்க்கைக்கான உத்தரவை காலதாமதமாக அறிவித்துள்ளதால், தனியாா் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை கட்டணம் செலுத்தி சோ்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆக. 17-ஆம் தேதிக்கு முன் தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று இருந்தால் உரிய ஆய்வு செய்து மாணவா்களையும் இலவசக் கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அனுமதிக்கவேண்டும்.

இச்சட்டத்தின்படி மாணவா்களை பள்ளியில் சோ்க்க ஜாதி, வருமானம், பிறப்பிட சான்றிதழ்கள், ஆதாா் காா்டு ஆகியவை முக்கிய ஆவணங்களாகும். தற்போதைய சூழலில் இச்சான்றிதழ்கள் பெறுவதில் சிரமங்கள் உள்ளதால், மாவட்ட கல்வித் துறை இதுகுறித்து உரிய விளக்கம் மற்றும் சான்று அளிப்பதில் கால அவகாசம் வழங்க வேண்டும். எனவே, இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி சோ்க்கையை உறுதி செய்ய, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதியும், இணையதளம் வாயிலாக பள்ளி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பையும் வழங்க வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com