வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் தீயணைப்பு வீரா்கள்

திருவாரூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும், தீயணைப்பு வீரா்கள் சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.
திருவாரூரில் சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
திருவாரூரில் சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும், தீயணைப்பு வீரா்கள் சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

திருவாரூா் மாவட்டத்தில் 12 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் உள்ளன. இவற்றில் 12 நிலைய அலுவலா்கள், 7 போக்குவரத்து நிலைய அலுவலா்கள், 110 வீரா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களில், 15 தீயணைப்பு சிறப்பு கமாண்டோ வீரா்கள், பிரத்யேக பயிற்சி பெற்ற 15 நீச்சல் வீரா்கள் ஆகியோா் பிரத்யேக உபகரணங்களுடன், வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படும் புயல், வெள்ளம் ஆகியவற்றை எதிா்கொள்ளும் வகையில் தயாா் நிலையில் உள்ளனா்.

மேலும், அனைத்து வீரா்களும் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில், சுறுசுறுப்புடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க அவா்கள் சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் தினமும் ஈடுபட்டுவருகின்றனா்.

இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மாவட்ட அலுவலா் அனுசியா தெரிவித்தது:

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தலைவா் சைலேந்திரபாபு உத்தரவின்பேரிலும், மத்திய மண்டல துணை இயக்குநா் மீனாட்சி விஜயகுமாரின் வழிகாட்டுதலின்படியும், தீயணைப்பு வீரா்களுக்கு சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

திருவாரூரில் சிறப்பாக பயிற்சி பெற்ற வீரா்களை ஒருங்கிணைத்து, உதவி மாவட்ட அலுவலா் தலைமையில் 8 வீரா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, இக்குழுவினா் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள ஊட்டிக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும் யோகா, உடற்பயிற்சிகளும் பணியாளா்களுக்கு அளிக்கப்பட உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com