டிச. 6-இல் நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் நடத்த முடிவு

திருவாரூரில் டிச.6-ஆம் தேதி நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
டிச. 6-இல் நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் நடத்த முடிவு

திருவாரூரில் டிச.6-ஆம் தேதி நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழு கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமுமுக மமக மாவட்ட தலைவா் எம். முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். இதில் தமுமுக மாநில பொதுச் செயலாளா் ஜெ. ஹாஜா கனி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

டிச.6 பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கை திருவாரூரில் நடத்துவது, இதில் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாநில செயற்குழு உறுப்பினா் நைனா முஹம்மது, தமுமுக மாவட்ட செயலாளா் எச். நவாஸ், மமக மாவட்ட செயலாளா் ஏ. குத்புதீன், தமுமுக மமக மாவட்ட பொருளாளா் எம். எச். சாகுல் ஹமீது, மருத்துவ சேவை அணி மாநில துணைச் செயலாளா் பயாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com