மழை பாதிப்பு பகுதிகளில் அமைச்சா் ஆய்வு
By DIN | Published On : 07th December 2020 08:00 AM | Last Updated : 07th December 2020 08:00 AM | அ+அ அ- |

நன்னிலம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா் மழையால் பாதிக்கப்பட்ட கொல்லுமாங்குடி பகுதி மக்கள் அருகிலுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களை அமைச்சா் காமராஜ் சந்தித்து பாதிப்பு குறித்து விவரம் கேட்டறிந்த பிறகு, உணவு மற்றும் கபசுரக் குடிநீா் வழங்கினாா். தொடா்ந்து, குமாரமங்கலம் பகுதியில் மழைநீா் சூழ்ந்த இடங்களை ஆய்வு செய்தபோது செய்தியாளா்களிடம் அவா் கூறியது: புரெவி புயலில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு சாா்பில், உரிய இழப்பீடு விரைவில் வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். வீடுகள் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு சாா்பில் அம்மா வீடு வழங்கப்படும். திருவாரூா் மாவட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட 10,300 குடும்பங்களைச் சோ்ந்த 30,000 போ் 168 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, தேவையான வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளன. மேலும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, கூடுதல் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.