வைகுண்ட ஏகாதசி: நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் டிச.15-இல் திருஅத்யயன உத்ஸவம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் வரும் 15-ஆம் தேதி தொடங்கி 20 நாள்கள் திருஅத்யயன உத்ஸவம் நடைபெறுகிறது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் வரும் 15-ஆம் தேதி தொடங்கி 20 நாள்கள் திருஅத்யயன உத்ஸவம் நடைபெறுகிறது.

புகழ்பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டும் திருஅத்யயன உத்ஸவம் 20 நாள்கள் நடைபெறவுள்ளது. டிச. 15-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் பத்து உத்ஸவம் தொடங்கி டிச. 24-ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது. வரும் 25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அன்றைய தினம் இராப்பத்து உத்ஸவம் தொடங்கி ஜனவரி 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. 20 நாள்களும் நாலாயிர திவ்விய பிரபந்த பாராயணம் நடைபெறும். சிறப்பு அலங்காரத்தில் சந்தானராமா் அருள்பாலிப்பாா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சிங்காரவடிவேலு, தக்காா் ரமேஷ், ஆய்வாளா் தமிழ்மணி மற்றும் பணியாளா்கள் மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com