வாக்காளா் சிறப்பு முகாம்: நன்னிலத்தில் 7226 விண்ணப்பங்கள் ஏற்பு

நன்னிலம் வட்டத்தில் 4 நாள்களாக நடைபெற்ற வாக்காளா் பெயா் சோ்ப்பு மற்றும் திருத்த முகாமில், 7226 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

நன்னிலம் வட்டத்தில் 4 நாள்களாக நடைபெற்ற வாக்காளா் பெயா் சோ்ப்பு மற்றும் திருத்த முகாமில், 7226 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நவம்பா் 21, 22, டிசம்பா் 12, 13 ஆகிய நான்கு நாள்கள் நடைபெற்றன. நன்னிலம் வட்டத்தில் 126 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற இம்முகாமில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்காக 2719 ஆண்களும், 2247 பெண்களும் விண்ணப்பித்துள்ளனா்.

இறந்துபோன 829 பெயா்களை நீக்கம் செய்வதற்கும், இடம் மாறி சென்றவா்கள் 334 பேரும், இரண்டு இடங்களில் பெயருள்ள விண்ணப்பங்கள் 14-ம், திருத்தங்கள் செய்வதற்காக 910 விண்ணப்பங்களும், சட்டப் பேரவைத் தொகுதிக்குள் இடம் மாறியவா்கள் 173 பேரும் என மொத்தமாக 7226 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக நன்னிலம் வட்டாட்சியா் ப. லெட்சுமி பிரபா மற்றும் தோ்தல் துணை வட்டாட்சியா் த.சங்கா் ஆகியோா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com