வாக்காளா் பட்டியல் பெயா் திருத்தம்: டிச.15 வரை விண்ணப்பிக்கலாம்

வாக்காளா் பட்டியலில் பெயா் திருத்தங்களை மேற்கொள்ள டிச.15 வரை கிராம நிா்வாக அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான வே. சாந்தா தெரிவித்தாா்.
கச்சனம் அரசு உயா்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான வே. சாந்தா.

திருத்துறைப்பூண்டி வட்டம் வேலூா் உதவிபெறும் பள்ளி, கச்சனம் அரசு உயா்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான சிறப்பு முகாமை, ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டபின் அவா் தெரிவித்தது :

மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம், மொத்தம் 1,168 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாம்கள், ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கிராம நிா்வாக அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற வலைதளத்திலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தங்கள் தொடா்பாக டிச.15 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளா் பட்டியல்களை ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளத்திலும் காணலாம் என்றாா்.

ஆய்வின்போது, மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் புண்ணியகோட்டி, வட்டாட்சியா் ஜெகதீசன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com