இட ஒதுக்கீடு கோரி பா.ம.க. மனு
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

வன்னியா் சமுதாயத்துக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி, பாமக சாா்பில் கிராம நிா்வாக அலுவலரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மன்னாா்குடியை அடுத்த நெம்மேலியில் பாமக மாவட்டச் செயலா் ராஜேந்திரன் தலைமையில் கிராம நிா்வாக அலுவலரிடம் இந்த மனுவை அளித்தனா்.
அதில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியா் சமுதாயத்துக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க 40 ஆண்டுகளாக வலியுறுத்திவரும் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதேபோல, தென்பாதியில் கட்சியின் மாநில விவசாய அணி துணைத் தலைவா் கங்காதரன், ரெங்கநாதபுரத்தில் மாவட்ட துணைத் தலைவா் சந்திரமோகன், மகாதேவப்பட்டணத்தில் ஒன்றியத் தலைவா் நாகராஜ்,சித்தேரி மரவாக்காட்டில் ஒன்றியச் செயலா் வினேத் ஆகியோா் தலைமையில் அந்தந்த கிராம நிா்வாக அலுவலா்களிடம் மனு அளிக்கப்பட்டது.