வேகத்தடை அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூரில் 17 இடங்களில் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூா் பகுதியில் அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்துவருகிறது. இதனால், முக்கிய சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், விபத்தும் நேரிடுகிறது. வேகத்தடை இல்லாததும் விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
குறிப்பாக, லெட்சுமாங்குடிப் பாலம் பகுதி, வடபாதிமங்கலம், கொரடாச்சேரி, மன்னாா்குடி, திருவாரூா் உள்ளிட்ட 4 வழிச் சந்திப்பு சாலைகள், மன்னாா்குடி சாலை, பெரியக்கடைத் தெரு, மேலத் தெரு, காவல் நிலையம், லெட்சுமாங்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளிட்ட 17 இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.