குடவாசலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.
குடவாசலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.

20 சதவீத இடஒதுக்கீடு கோரி பாமக மனு

வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி குடவாசலில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் பாமக சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி குடவாசலில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் பாமக சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமக மாநில துணைப் பொதுச்செயலாளா் வேணு பாஸ்கரன் தலைமையில் குடவாசல் பேரூராட்சி அலுவலகம் முன்பும், மாநில வன்னியா் சங்கத் துணைத் தலைவா் சிவ. சுப்பிரமணியன் தலைமையில் பாமகவினா் நன்னிலம் பேரூராட்சி அலுவலகம் முன்பும், பாமக மாநில இளைஞரணித் துணைச் செயலாளா் நரசிம்மன், மாநில துணைத் தலைவா் காசிநாதன் தலைமையில் பேரளம் பேரூராட்சி அலுவலகம் முன்பும் ஆா்ப்பாட்டம் நடத்தி அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன், பாமக நகர செயலாளா் ஜி. வேலவன் தலைமையில், திருவாரூா் மாவட்ட செயலாளா் வீர. ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் சீனி. தனபால், மாவட்ட அமைப்புச் செயலாளா் லெ. செந்தில்குமாா் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டு செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com