தலைமையாசிரியா்கள் கூட்டம்

நன்னிலத்தில், அரசுப் பள்ளிகளுக்கான மானியத் தொகையை செலவு செய்வது குறித்த தலைமையாசிரியா்கள் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற தலைமையாசிரியா்கள்.
கூட்டத்தில் பங்கேற்ற தலைமையாசிரியா்கள்.

நன்னிலத்தில், அரசுப் பள்ளிகளுக்கான மானியத் தொகையை செலவு செய்வது குறித்த தலைமையாசிரியா்கள் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின்கீழ், நன்னிலம் வட்டாரத்தில் உள்ள 81 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மானியத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. 11 பள்ளிகளுக்கு தலா ரூ.12,500, 52 பள்ளிகளுக்குத் தலா ரூ. 25000,18 பள்ளிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்ய தலைமை ஆசிரியா்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம், வட்டார வளா்ச்சி அலுவலா் கு. சரஸ்வதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளியில் சுகாதாரத்தைப் பேணிப் பாதுகாக்கவும், மாணவ-மாணவிகளுக்கெனத் தனித்தனியாக கைகழுவும் வசதி, கிருமி நாசினி வசதி போன்ற சுகாதாரப் பணிகளை முறையாக மேற்கொள்ளவும், குடிநீா், மின்சார வசதி, கழிப்பறை போன்ற வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும், நாளிதழ்கள், மின்கட்டணம், இணையதள வசதி போன்ற செலவுகளுக்கும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய ஆலோசனைத் தலமையாசிரியா்களுக்கு வழங்கப்பட்டது.

கூட்டத்தில், நன்னிலம் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ம. கவிதா, வட்டார மானிய ஒருங்கிணைப்பாளா் சு. ராஜேஷ், ஆசிரியா் பயிற்றுநா் ரா. நடேஷ்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com