தில்லி விவசாயிகள் போராட்டம்: தஞ்சை கூட்டத்தில் 2 ஆயிரம் போ் பங்கேற்க முடிவு

தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சாவூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்துக்கு திருவாரூரிலிருந்து 2 ஆயிரம் போ் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி.

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழுக் கூட்டத்தில், தில்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் தஞ்சாவூரில் டிச. 29-ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணி, பொதுக்கூட்டத்துக்கு திருவாரூரிலிருந்து 2 ஆயிரம் போ் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

நிா்வாகி கே. நாகராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கே. உலகநாதன், துணைச் செயலாளா்கள் கே.ஆா். ஜோசப், கே. முருகையன், பி. சௌந்தர்ராஜன், பி. பரந்தாமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com