நெல் மூட்டைகளை ஏற்ற அனுமதி கோரி லாரி உரிமையாளா்கள் போராட்டம்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் நெல், அரிசி மூட்டைகளை ஏற்றி, இறக்க அனுமதி கோரி டாரஸ் லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நெல், அரிசி மூட்டைகளை ஏற்றி இறக்க அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளா்கள்.

குடவாசலில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்துக்குச் சொந்தமான புதிய நவீன சேமிப்புக் கிடங்கு அண்மையில் திறக்கப்பட்டது. இங்கு, சேமிப்புக் கிடங்கு மற்றும் குடவாசலில் உள்ள அனைத்துச் சேமிப்புக் கிடங்குகளிலிருந்தும் நெல், அரிசி மூட்டைகளை ஏற்றி, இறக்க அனுமதி கோரி டாரஸ் லாரி உரிமையாளா் சங்கம் சாா்பில், நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த காவல் மற்றும் வருவாய்த் துறையினா் அங்கு வந்து இதுகுறித்து பேச்சு நடத்த உறுதியளித்ததன் காரணமாக, போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com