திருவள்ளூர் அருகே ஏரியில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் பலி

திருவள்ளூர் அருகே மீன் பிடிக்கச் சென்ற போது ஏரியில் சேற்றில் சிக்கி இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 
திருவள்ளூர் அருகே ஏரியில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் பலி

திருவள்ளூர் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் ஒருவர் சடலம் கிடைத்த நிலையில், மற்றொருவர் சடலம் இரவு வரையில் கிடைக்காததால் தீயணைப்பு துறையினர் திரும்பிச் சென்றனர்.

ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டரை, மந்தவெளி தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சதீஷ்குமார் (30). இவர் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தண்டரை, வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. மகன் சதீஷ் (31). இவர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தை பிறந்து 20 நாள்களே ஆகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலையில் சதீஷ்குமார் மற்றும் சதீஷ் உள்பட 6 பேர் திருவள்ளூர் அருகே நேமம் கிராமத்தில் உள்ள ஏரியில் மீன்பிடித்து விட்டு குளிக்கச் சென்றனர்.

இதில் சதீஷ்குமார் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் ஏரியில் குளித்துக்கொண்டே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏரியில் சேற்றில் சிக்கி சதீஷ் மூழ்கி விடவே அவரை காப்பாற்ற சென்ற சதீஷ்குமாரும் மூழ்கினார். இருவரும் தண்ணீரில் மூழ்கியதை பார்த்த மற்ற 4 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.  இதையடுத்து நண்பர்கள் கூச்சலிடவே அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஏரியில் இறங்கி இரண்டு பேரையும் தேடினர். இதில் சதீஷ்குமாரை உடலை மட்டும் மீ்டடனர். இதில் சதீஷின் உடலை தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் துரைபாண்டியன் உத்தரவின்பேரில் சார்பு ஆய்வாளர் தீபன்ராஜ் மற்றும் திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஏரி தண்ணீரில் மூழ்கி மாயமான சதீஷை வெகுநேரம் தேடியும் கிடைக்கவில்லை. இரவு நேரமாகிவிட்டதால் சதீஷ் தண்ணீரில் இருந்து மீட்க முடியாமல் காலையில் தேடிக்கொள்ளலாம் என்று தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் திரும்பினர்.

இச்சம்பவம் குறித்து வெள்ளவேடு காவல் ஆய்வாளர் ஷோபா தேவி, சார்பு ஆய்வாளர் தீபன்ராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com