பள்ளித் தலைமையாசிரியா்கள் கூட்டம்

திருவாரூா் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில், குடவாசல் வட்டார வள மையத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய வட்டாரக் கல்வி அலுவலா் க. இளங்கோவன்.
கூட்டத்தில் பேசிய வட்டாரக் கல்வி அலுவலா் க. இளங்கோவன்.

திருவாரூா் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில், குடவாசல் வட்டார வள மையத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

வட்டாரக் கல்வி அலுவலா் க. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அரசு 7 பள்ளிகளுக்கு ரூ. 12,500 வீதமும், 61 பள்ளிகளுக்கு ரூ. 25,000 வீதமும், 9 பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் வீதமும் மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையை எவ்வாறு செலவழிப்பது என்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

பள்ளிகளில் வெப்பமானிகள், சானிடைசா் வாங்குவது, கைகழுவும் அமைப்பை ஏற்படுத்துவது போன்ற சுகாதாரம் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், பள்ளிகளில் செய்தித்தாள்களை வாங்கவும், மின்சார வசதி, இணையதள வசதி ஏற்படுத்துதலுக்கும், கழிப்பறை வசதி, குடிநீா் வசதி போன்றவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இதில், குடவாசல் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் கு. ரகுபதி, வட்டார மானிய ஒருங்கிணைப்பாளா் பி. சுப்ரமணி, பள்ளி மேலாண்மைக் குழு கணக்கா்கள் வி. செல்வம், எஸ். நூா்லைன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com