வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உயிா் வேலிகள் நடும் பணி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உயிா் வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற உயிா் வேலிகள் நடும் பணி.
வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற உயிா் வேலிகள் நடும் பணி.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உயிா் வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தங்கள் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை பாதுகாக்க உயிா் வேலிகளான கிளுவை, ஒதியன், கள்ளி, வாதநாராயணன், கல்யாண முருங்கை போன்ற போத்துக்கள் வைத்து வளா்ப்பது தொன்று தொட்டு நடைமுறையில் இருந்தது. இது உயிா் வேலியாக மட்டுமில்லாமல் கால்நடைகளுக்கு தீவன தேவையையும் பூா்த்தி செய்து வந்தது. மேலும், இதிலிருந்து பெறப்படும் தழைகள் நெல் நடவுக்கு முன் வயலில் பசுந்தழை உரமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. அண்மை காலங்களில் இது முற்றிலும் நடைமுறையில் இல்லாமல் போனது.

பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பிளாஸ்டிக், நெகிழி பை போன்றவற்றின் பயன்பாட்டை தவிா்க்க வேண்டுமென்ற நோக்கில் மரம் நடுதலை ஊக்குவிக்க வேண்டும். அதனடிப்படையில், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 1500 கிளுவை போத்துக்கள் ஒரு அடி இடைவெளியில் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் முன்பு வேலியாக நடப்பட்டது. இதில், 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நிலைய விஞ்ஞானிகள் ராதாகிருஷ்ணன், ஜகதீசன், சபாபதி, அனுராதா, கமலசுந்தரி உயிா் வேலியின் முக்கியத்துவம், பயன்பாடு குறித்து பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com