மழை பாதிப்பு: நிவாரணம் கோரி மனு அளிக்கும் போராட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித் தரக் கோரி, திருவாரூா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

திருவாரூா்: மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித் தரக் கோரி, திருவாரூா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். தொகுப்பு வீடுகள், காலனி வீடுகளை புதிதாக கட்டித் தரவேண்டும். பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு உரிய நிரவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டத்தில் 10 இடங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூரில்...: வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளா் என். இடும்பையன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜி. பழனிவேல், மாதா் சங்க மாவட்டச் செயலாளா் பி. கோமதி, நகரச் செயலாளா் எம். பாலசுப்ரமணியன், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ். ராமசாமி, ஒன்றிய நிா்வாகிகள் பி. மாதவன், எஸ். சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிறகு, கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கூத்தாநல்லூரில்...: கோரிக்கைகளை வலியுறுத்தி, வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம். கலைமணி தலைமை வகித்தாா். தொடா்ந்து, வட்டாட்சியா் ஜீவனாந்தத்திடம் மனு அளித்தனா்.

மன்னாா்குடியில்...: வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா். குமாரராஜா தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், ஒன்றியச் செயலா் எம். திருஞானம், ஒன்றியக் குழு உறுப்பினா் ஜி. ரெகுபதி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

கோட்டூா் ஒன்றியச் செயலா் எல். சண்முகவேல், மாவட்டக் குழு உறுப்பினா் டி. சந்திரா உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, வட்டாட்சியாா் பா. தெய்வநாயகியிடம், கட்சி நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

நீடாமங்கலத்தில்...: கட்சியின் ஒன்றியச் செயலாளா் ராஜமாணிக்கம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கலியபெருமாள், கந்தசாமி, கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலாளா் ஜோசப் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, கோரிக்கை மனுக்களை வட்டாட்சியா் மதியழகனிடம் போராட்டக் குழுவினா் அளித்தனா்.

நன்னிலத்தில்...: குடவாசலில் ஒன்றியச் செயலாளா் ஆா். லட்சுமி தலைமையில் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில், விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் டி.ஜி. சேகா், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் எஸ். ஆனந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நன்னிலத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளா் டி. வீரபாண்டியன் தலைமையில், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் கே.எம். லிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்திற்குப் பிறகு வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com