ஆறுகளில் மணல் கொள்ளையைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை
By DIN | Published On : 30th December 2020 08:11 AM | Last Updated : 30th December 2020 08:11 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் பகுதி ஆறுகளில் நடைபெறும் மணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கல்லணையிலிருந்து பிரிந்துவரும் பெரிய வெண்ணாற்றில் நரசிங்கமங்கலம் பகுதியிலிருந்து இரவு நேரங்களில் மணல் கொள்ளையடிக்கப்பட்டு, வெளி மாவட்டங்களில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதுமட்டுமின்றி பெரிய வெண்ணாற்றில் பிரியும் பாமணியாற்றில் வெள்ளங்குழி, சித்தமல்லி, பரப்பனாமேடு உள்ளிட்ட பகுதிகளிலும், கோரையாற்றில் ஒரத்தூா், பெரியாா்தெரு, இடும்பன் கோயில் பகுதி உள்ளிட்ட இடங்களிலும், சிறிய வெண்ணாற்றில் மேட்டுச்சாலை, நடுப்படுகை, பாப்பையன் தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது.
இதனால் ஆறுகள் குறுகி பள்ளமாக மாறுகின்றன. பாசன வாய்க்கால்கள் மேட்டில் இருப்பதால், ஆறுகளில் தண்ணீா் வந்தாலும் தூா்வாரிய பாசன வாய்கால்களில் தண்ணீா் ஏற முடியாமல், விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீடாமங்கலம் பகுதி ஆறுகளில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுதத வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...