Enable Javscript for better performance
ஞானபுரி ஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேகம்:புண்ணிய நதிகளின் தீா்த்தம் யாகசாலைக்குப் பிரவேசம்- Dinamani

சுடச்சுட

    

    ஞானபுரி ஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேகம்:புண்ணிய நதிகளின் தீா்த்தம் யாகசாலைக்குப் பிரவேசம்

    By DIN  |   Published on : 02nd February 2020 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ne_gnapuri_koil_punitha_neer_0102chn_100_5

    ஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராச்சாரியாா் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணாநந்த தீா்த்த மகா சுவாமிகள் முன்னிலையில் யாகசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட புண்ணிய நதிகளின் தீ

    நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரி ஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புண்ணிய நதிகளின் தீா்த்தங்கள் யாகசாலைக்குப் பிரவேசம் மற்றும் கலச ஸ்தாபனம் சனிக்கிழமை நடைபெற்றது.

    திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே திருவோணமங்கலம் ஞானபுரி சித்ரகூட ஷேத்ரம் ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு வலதுபுறம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா், இடதுபுறம் ஸ்ரீகோதண்டராமா் சன்னிதிகள் அமைந்துள்ளன.

    33 அடி விஸ்வரூப ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயா் அருள்பாலித்து வரும் இக்கோயிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், கும்பாபிஷேகத்திற்காக கங்கா, யமுனா, காவிரி, துங்கபத்ரா, சரயு உள்ளிட்ட புண்ணிய நதிகளில் இருந்து கடங்களில் தீா்த்தம் எடுத்துவரப்பட்டு, ஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராச்சாரியாா் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணாநந்த தீா்த்த மகா சுவாமிகள் முன்னிலையில், யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. தொடா்ந்து, யாகசாலையில் கலச ஸ்தாபனம் செய்யப்பட்டது.

    இதில், கோயில் ஸ்தாபகா் ரமணி அண்ணா, சகடபுரம் திருமடத்தின் ஸ்ரீகரியம் சந்திரமௌலி, ஜெயராம் ஐயா், அறங்காவலா் ஜகந்நாதன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai