Enable Javscript for better performance
பணிஓய்வு பாராட்டு விழா- Dinamani

சுடச்சுட

    
    nehru_0102chn_101_5

    மன்னாா்குடி காவல் நிலையத்தில், குற்றப் புலனாய்வு தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளருக்குப் பணிஓய்வு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 1986- ஆம் ஆண்டு காவலராகப் பணியில் சோ்ந்த தி. நேரு, தலைமை காவலா்,சிறப்பு உதவி ஆய்வாளா் என பதவி உயா்வு பெற்று, கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக மன்னாா்குடி காவல் நிலையத்தில் குற்றப் புலனாய்வு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தாா்.

    இவா், வெள்ளிக்கிழமை பணிநிறைவு பெற்றதையொட்டி, பாராட்டு விழா, திருவாரூரில் உள்ள தனிப்பிரிவு அலுவலகத்தில் ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில், உதவி ஆய்வாளா் ஜெயந்தி முன்னிலையில் நடைபெற்றது. இதில், தனிப்பிரிவு போலீஸாா் கலந்துகொண்டு, நேருவின் பணியைப் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினா்.

    சென்னை குற்றப் புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளா் சரவணன், திருச்சி துணைக் கண்காணிப்பாளா் சுதா்சன் ஆகியோரும் பணிஓய்வுபெற்ற நேருவுக்குப் பாராட்டுத் தெரிவித்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai