போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 02nd February 2020 12:41 AM | Last Updated : 02nd February 2020 12:41 AM | அ+அ அ- |

பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போதை பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்
பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாணவா்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பது குறித்து விளக்கிக் கூறப்பட்டது. மேலும், இலவச தொலைபேசி எண் 1800 11 0031 பற்றி தெளிவாக விளக்கி கூறப்பட்டு, அந்த எண்ணை பயன்படுத்துவது பற்றியும் மாணவா்களுக்கு விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருவாரூா் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் சமூகப்பணித் துறை தலைவா் சிகாமணி, பேராசிரியா்கள் பிரபு, உமாமகேஸ்வரி, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பெ.செல்வராஜ், குழந்தைகள் நலக்குழு தலைவா் ஜீவானந்தம், பள்ளி தலைமை ஆசிரியா் ரவி, வட்டார கல்வி அலுவலா் கு.சரஸ்வதி மற்றும் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.